சிக்கலில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்! நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரிகை! - Seithipunal
Seithipunal


ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட எட்டு பேர் மீது, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகிய இருவர் அளித்த புகாரின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி செய்ததாக இரு வழக்குகள் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது ஜாமினில் இருந்து வரும் நிலையில், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பி.க்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்ற நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது, பதினைந்து பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது வழக்கில் ராஜேந்திர பாலாஜி உட்பட எட்டு பேர் மீது 25 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajendra Balaji case Sri valliputur Court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->