6 மணி நேரம் விசாரணை.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்.!!
rajendra balaji was produced in court
அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தாகரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் தேடப்பட்டு வந்தது. அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று ராஜேந்திர பாலாஜியை ஓசூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 6 மணி நேர விசாரணை, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
English Summary
rajendra balaji was produced in court