"விடாமுயற்சி" - பொங்கல் வாழ்த்து சொன்ன அஜித், ரஜினி, அதிமுக தலைவர்!
Rajini ADMK Jayakumar Wish Pongal
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று தை திருநாள் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கோலங்கள் இட்டு, புத்தாடைகள் அணிந்து, பானையில் பொங்கலிட்டு கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை துறையினரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், "துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர். ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி!
நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியில், "உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "நிலத்தில் நெடுநேரம் நின்று நீர் பாய்ச்சி ரத்தத்தை வியர்வையாக்கி விளைச்சல் வரை விடாமுயற்சியுடன் உழைக்கும் விவசாயிகளுக்கும்-விவசாயத்திற்கு உதவும் ஊர்வன உயிர்கள் முதல் துள்ளி குதிக்கும் காளை மாடுகள் வரை தந்த இயற்கைக்கும்-இறைவனுக்கும் நன்றி சொல்லும் நன்னாள்!
தரணியெங்கும் வாழும் ஒவ்வொரு உலகத்தமிழனுக்கும் எனது தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Rajini ADMK Jayakumar Wish Pongal