பாம்பன் பள்ளிவாசலில் மினாரா விவகாரம்: தார்பாய் அகற்றம்! பிரதமர் மோடி வருகையால் சர்ச்சை? உண்மை என்ன?!
Rameshwaram Pallivasal issue
ராமேஸ்வரம், பாம்பன் பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உரிய அனுமதி இல்லாமல் "அல்லாஹு அக்பர்" என்ற பெயர் பலகை வைக்கப்பட்டதாகவும், இதனால் அது தார்பாய் போட்டு மூடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், இது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயல் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாம்பன் பள்ளிவாசலில் மினாராவில் உள்ள "அல்லாஹு அக்பர்" பெயர் பலகை மீது இருந்த தார்ப்பாய் நீக்கப்பட்டு உள்ளது.
English Summary
Rameshwaram Pallivasal issue