இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு! பாஜக நிர்வாகிக்கு கடிவாளம்! உயர்நீதிமன்ற கிளை அதிரடி!
Ramnat BJP Kathiravan Bail Case
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பாஜக நிர்வாகிக்கு, நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். பாஜக நிர்வாகியான இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரின் அந்த முன்ஜாமின் மனுவில், "அதியமான் கடற்கரைப் பேருந்து நிலையம் பகுதியில், கடந்த மாதம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு சொற்பொழிவு நடைபெற்றது.
இது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக நான் பதிவிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என்றும் கதிரவன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மத மோதல்களை தூண்டும் வகையில் கதிரவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். எனவே இவருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது" என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி அவர்கள், "மனுதாரர் கதிரவன் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது போன்று இரண்டாவது முறையாக பதிவு செய்துள்ளது உறுதியாகி உள்ளது.
அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருப்பதால், இனி இது போன்ற பதிவுகளை பதிவிட மாட்டேன் என்றும், சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நிபந்தனை விதித்து, கதிரவனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
English Summary
Ramnat BJP Kathiravan Bail Case