இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர் கிரிசலினா ஜோர்ஜீவா சந்தித்தார். அப்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப் நிதி உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இலங்கைக்கு உதவ வெளிநாட்டு உதவி கூட்டமைப்பை  அமைப்பதில் உறுப்பு நாடுகள் முன்மொழிந்துள்ளதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranil wickremesinghe thanks nirmala sitharaman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->