#INDvsWI || அறிமுக போட்டியிலேயே அசத்தலான 2 விக்கெட் வீழ்த்திய "ரவி பிஷ்னோய்".! திணறும் வெஸ்ட் இண்டீஸ் அணி.!
Ravi Bishnoi first Wicket
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (டேபியு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரவி பிஷ்னோய் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான முதல் ஆட்டத்தில், தனது இரண்டாவது ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
முன்னதாக அவர் வீசிய முதல் ஓவரில் விக்கெட் கேட்கப்பட்டது. ரிவீவ் வரை சென்று விக்கெட் இல்லாமல் ஏமாற்றம் அளித்தது.
ரவி பிஷ்னோய் அடுத்து வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஸ்டன் சேஸ்-னை எல்பிடபிள்யூ மூலம் விக்கெட்டை எடுத்தார். அதனை தொடர்ந்து அதே ஓவரில் 5வது பந்தில் ரோவ்மன் போவெல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தற்போதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 94 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
English Summary
Ravi Bishnoi first Wicket