தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த கோரிக்கை.!
request to cm Islamic terrorist organizations should be banned in Tamil Nadu
இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தாவது,
"வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற பணியை தமிழக பாஜக தலைவர் எனக்கு வழங்கியுள்ளார். அதன்படி, பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் பயனடைந்த இஸ்லாமியர், கிறிஸ்தவ பயனாளிகளை நேரடியாக சந்தித்து நலத்திட்டங்களை விளக்கி வருகிறேன்.
அப்படியாக நேற்று முன்தினம் இரவு எனது காரில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நான் வந்துகொண்டிருந்தபோது, இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடமிருந்து மயிரிழையில் நான் உயிர் தப்பினேன். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும், போலீஸார் அவர்களை தடுக்கவில்லை, அந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத சக்திகள் காஷ்மீர் மாநிலம் போல் செயல்படுகின்றன. சட்டம் ஒழுங்கு சுத்தமாக சரியில்லை. உளவுத்துறை செயல்பாடும் பூஜ்ஜிம்.
காவல்துறையை தன்னிடம் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பயங்கரவாத அமைப்புகளாக செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ, தமுமுக போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக இவர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.
English Summary
request to cm Islamic terrorist organizations should be banned in Tamil Nadu