அதிமுக எம்பி ஓ.பி ரவீந்திரநாத்க்கு எதிராக சபாநாயகரிடம் மனு.! கைதாக வாய்ப்பு.?! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் அதிமுக எம்பி ஓ.பி ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டத்தில் ஆண் சிறுத்தை ஒன்று சமீபத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. 

இது குறித்து தோட்ட மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓ.பி.ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற சபா நாயகருக்கு மாவட்ட வன அலுவலர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "சிறுத்தை இறந்த தோட்ட உரிமையாளரான அதிமுக எம்பி ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்." என்று கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், "மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிந்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

request to speaker cheeta died in opr garder issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->