தற்காலிக ஆட்சி! அடுத்த கூட்டத்தொடருக்கு டவுட்! ஆப்பு வைக்கும் நிதிஷ்குமார்! - Seithipunal
Seithipunal


அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை ஒன்றிய பாஜக ஆட்சி நீடிப்பது சந்தேகம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமலகத்துறை, சிபிஐ அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் சரியான சிகிச்சை வழங்காததை கண்டித்தும் தமிழக ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியதாவது, மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அமைந்துள்ள இந்த ஆட்சி மக்களால் அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் மைனாரிட்டி அரசாகத்தான் இருந்து வருகிறது.

பிரதமர் கொஞ்ச நஞ்சை பொய்யா சொன்னார். பொய்யை மட்டும் தான் நாட்டு மக்களிடம் சொன்னார். ஒன்றிய பாஜக ஆட்சி அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை இருக்குமா என்பதே சந்தேகம்தான். எப்போது வேண்டுமானால் நித்திஷ்குமார் தனது சுயரூபத்தை காட்டி விடுவார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RS Bharti says it is doubtful that the Union BJP government will continue till the next parliamentary session


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->