வெடித்தது அடுத்த சர்ச்சை! திமுக ஐ.டி விங்கிற்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம்!
RSS Condemns DMK IT wing
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அவப்பெயர் மற்றும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நினைக்கிறது என குற்றம் சாட்டியுள்ள அவர் தமிழக அமைச்சர் தலைமையில் செயல்படும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு விமர்சனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.