சாதி பாகுபாடு களைய இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வு! - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 2ம் தேதி தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு பாஜக தரப்பிலிருந்து கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பிரபலங்கள் என 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதேபோன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் "சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்தங்கிய நிலையில் வைத்துள்ளோம். அவர்களை நாம் பொருட்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளாக இது தொடர்ந்தது. சமத்துவத்திற்கு சில சிறப்பு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதில் இடஒதுக்கீடும் ஒன்று. இப்படிப்பட்ட பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவு அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS Mohan Bhagwat said reservation is solution to end caste discrimination


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->