தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு! மீண்டும் சம்பவம் செய்த தமிழக அரசு - கொந்தளிக்கும் பாஜக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது தி.மு.க. அரசின் பாசிச முகத்தை காட்டுவதாக, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "1925ம் ஆண்டு விஜயதசமி அன்று 'ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்' (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடப்பது வழக்கம்.

தமிழகத்தில் 1940களில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த திமுக அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே, சர்வாதிகார ஆட்சியைப் போல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்துள்ளது.

இதுவரை எந்த பதிலையும் தராமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. அதுபோல இந்த ஆண்டும் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு என்பது சீருடை அணிந்து ராணுவம் போல கட்டுப்பாட்டுடன் நடக்கும் அணிவகுப்பு. இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் அனைத்தும் மிகவும் அமைதியுடன் நடந்திருக்கிறது. 

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது திமுக அரசின் பாசிச தன்மையையே காட்டுகிறது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அணிவகுப்பு, பேரணி நடத்த நமது அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் ஒரு பக்கம் முழங்கிக் கொண்டே, மறு பக்கம், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கிறது பாசிச திமுக அரசு. இது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா ஆண்டு. உலக வரலாற்றில் துவங்கிய நாளில் இருந்து எந்த பிளவையும் சந்திக்காமல் தொடர்ந்து 100 ஆண்டுகள் மக்களின் நன்மதிப்பை பெற்று வெற்றிகரமாக செயல்படும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள். அந்த அமைப்பால் ஊக்கம் பெற்று இந்த நிலையை அடைந்தவர்கள்.

நாட்டை வழிநடத்தியவர்களும், இப்போது வழிநடத்துபவர்களும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும் குறுகிய எண்ணத்துடன் நூற்றாண்டு காணும் இயக்கத்தின் அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS Road Rally DMK Govt BJP MLA Vanathi Condemn


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->