வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000, பெண்களுக்கு மாதம் ரூ.3000!...அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடப்பு மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்த நிலையில், தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், கிருஷி சம்ருத்தி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rupees 4000 per month for unemployed youth rupees.3000 per month for women action notice


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->