பஜ்ரங், வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து அவருடன் போராடிய சாக்‌ஷி மாலிக் சொன்ன கருத்து! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியில் இன்று மல்யுத்த வீரர்களாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் இணைந்திருப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளனர்.

ஹரியாணா மாநில சட்டமன்ற தேர்தலில் இவர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 2023 மக்களவை தேர்தலுக்கு முன் நாட்டின் 80% மாநிலங்களில் காங்கிரஸ் அல்லது காங்கிரசை கூட்டணி கட்சியின் ஆட்சியை நிலை நிறுத்தி, மத்தியில் இண்டி கூட்டணி  ஆட்சியை கொண்டுவரும் முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அதனை அரசியல் ரீதியாக, வாக்கு வாங்கி அரசியலாக மாற்றும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றி கண்டுள்ளது. அதற்க்கு உதாரணம் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் தான்.

இந்த நிலையில், ஹரியானாவின்  சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு மிக மோசமான ஒரு தோல்வியை கொடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. 

அதற்க்கு மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை களமிறக்க திட்டமிட்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் தலைவலியாக இருந்த பிரச்சனை, "மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்தபோது பிரிஜ்பூஷண் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக அவரை பதவி நீக்கம் செய்யக்கோரிய வினேஷ் போகத் - பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக்கின் போராட்டம் தான்.

அப்போதே இந்த போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், அதிகாரபூர்வமாக வினேஷ் போகத் - பஜ்ரங் புனியா தங்களை காங்கிரசில் இணைத்து கொண்டுள்ளனர்.

மேலும், ஹரியாணாவில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா போட்டியிடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து போராடிய சாக்‌ஷி மாலிக் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனக்கு வந்த அழைப்பை நான் நிராகரித்துவிட்டேன்.

விளையாட்டின் மீது நம்பிக்கையுள்ளதால், மல்யுத்தத்தில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தி, வீராங்கனைகள் மீதான சுரண்டலுக்கு முடிவு கிடைக்கும் வரை போராடுவேன் என்று சாக்‌ஷி குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sakshi Malik say about Bajrang Vinesh Bhogat joining the Congress party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->