ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பை புறக்கணித்த சமாஜ்வாதி.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக  கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மத குருமார்கள், தொழிலதிபர்கள், திரைப்படத் துறையினர் உள்ளிட்ட 8000 முக்கிய பிரமுகர்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என நேற்று அறிவித்து விட்டது.  இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும் அரசியல் விழா என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதேபோன்று திரிணமுல் காங்கிரஸ்  தலைவர் மம்தா பானர்ஜியும்  இந்த விழாவை புறக்கணித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகுத்துள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இந்த விழாவை முற்றிலும் புறக்கணிப்பதன் காரணமாக பாஜக நடத்தும் விழாவாகவே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samajwadi ignored the Ram Temple Kumbabhishek invitation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->