ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. சமத்துவ மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு? சரத்குமார் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்தை தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக கட்சியில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்து போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அமமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். 

மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாவட்ட மற்றும் உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samathuva makkal katchi not participate in erode by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->