சசிகலாவின் பிளான்! தமிழகத்தில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றம்?! காத்திருக்கும் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முக்கிய புள்ளிகள், முன்னாள் அமைச்சர்கள், 99 சதவீதம் எம்எல்ஏக்கள், தொண்டர்கள், அடிமட்ட நிர்வாகிகள் என அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட தொடங்கி விட்டனர்.

அதேசமயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஓபிஎஸ் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். தற்போது தொடரப்பட்டுள்ள உயர்நீதிமன்ற வழக்கில் ஆறுதலாக ஏதேனும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவரின் அடுத்த கட்ட அரசியல் என்ன ஆகும் என்பதை தெரியவரும்.

அதே சமயத்தில் அவர் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள திட்டமிட்டு வருவதாக, அவரின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

இதற்காகவே சசிகலாவை சந்திக்க போவதாக தொடர்ந்து ஓபிஎஸ் கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், சசிகலாவோ இப்போது சந்திப்பதற்கு உண்டான எந்த திட்டத்தையும் வைத்திருக்கவில்லை என்று அவரின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

மேலும், சசிகலாவின் திட்டப்படி ஓபிஎஸ்-யை சந்திக்கும்போது தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றம் நிகழக்கூடியதற்கு உண்டான பரபரப்பு தொற்றி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் காய் நகர்த்தி வருவதாக அவரின் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

அதன் காரணமாகவே இவர்களின் சந்திப்பு இதுவரை நிகழவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அப்படியான ஒரு பரபரப்பு சூழ்நிலை தமிழகத்தில் நிலவே வாய்ப்பு இல்லை. வருகின்ற ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி விவகாரங்கள் சூடு பிடிக்கும் போது, ஒரு வேலை அந்த பரபரப்பு தொற்றலாம், ஆனாலும் ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு என்பது எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala ops meet tamilnadu admk 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->