பா.ஜ கூட்டத்தில் பாலியல் சீண்டலா.? சசிகலா புஷ்பாவுக்கு நடந்ததன் வீடீயோவும், பின்னணியும்.!  - Seithipunal
Seithipunal


பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் முன்னாள் எம்.பியும், பாஜக நிர்வாகிகளுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டார். அப்பொழுது கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு வருகிறது. 

இந்த வீடியோ வைரலான நிலையில் அது குறித்த தகவலை ஆராயும் பதிவு தான் இது. சுற்றிலும் ஆண் நிர்வாகிகள் இருக்க சசிகலா புஷ்பாவுக்கு அருகில் பாஜக மூத்த நிர்வாகி பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி இருக்கிறார். அவர்தான் சசிகலாவுக்கு பாலியல் சீண்டல் செய்ததாக வதந்திகள் பரவி வருகின்றது.

ஆனால் இந்த வீடியோவை உற்று கவனித்தால் கூட்டத்தினர் பின்னாடி நின்றவாறு தள்ளிய நிலையில் நெரிசல் தாங்க முடியாமல் சசிகலா எரிச்சலடைகிறார். பின்னர், அவருடைய சேலை பாலகணபதி நிற்கும் இடத்தில் மாட்டிக் கொள்ள அதை சசிகலா புஷ்பா வெளியில் எடுக்க பாலகணபதி உதவுகிறார். 

இதை பார்க்கும் பொழுது அவரது புடவையை பால கணபதி பிடித்து இழுப்பதைப் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது. அத்துடன் மலர் வளையம் வைக்கும் போது சசிகலாவின் கையை அவர் பிடிக்க முயற்சிப்பது போல தோற்றமளிக்கிறது. 

ஆனால், அவர் மலர் வளையத்தை பிடிக்க முயற்சிக்கிறார். அவர் பார்வை எங்கோ இருக்க, சசிகலாவின் கைகளில் அவரது கை மோதுகிறது. பின் அனைவரும் சேர்ந்தவாறு, 'பாரத் மாதா கீ ஜெய்.' என்று முழங்குகின்றனர். இந்த வீடியோ தற்போது பலராலும் இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala pushpa and bala ganapathy video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->