சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டல் செய்த பாஜக நிர்வாகி.. கணவர் காவல் நிலையத்தில் புகார்.! - Seithipunal
Seithipunal


சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி பொன் பால கணபதி மீது அவரது முன்னாள் கணவர் ராமசாமி தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரனின் 65 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதில், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவிடம், மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இணையத்தில் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் பொன் பாலகணபதியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் சீண்டல் செய்த பொன்பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Pushpa sexually harassed BJP executive Husband filed complaint at police station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->