தேர் திருவிழா விபத்து.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சசிகலா.!!
sasikala visit thanjavur
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்தி தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், சிகிச்சை பெற்றுவருபர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேர் திருவிழா விபத்து குறித்து அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் சசிகலா, தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். அங்கு சென்ற சசிகலா களிமேடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.