சவுக்கு சங்கரின் போராட்டதிற்கு கிடைத்த வெற்றி - வாங்கப்பட்ட கையெழுத்து!   - Seithipunal
Seithipunal



ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சி என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து, அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை பெற்று வலம்வந்தவர் சவுக்கு சங்கர். அப்படியாக நீதித்துறை (நீதிபதிகள்) குறித்து ஒரு கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்த வழக்கு விசாரணையின் போது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

ஆனால், தான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என்று சவுக்கு சங்கர் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதிகள் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தனர். அதன்படி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, சவுக்கு சங்கரை பார்ப்பதற்கு ஒரு மாதம் தடை விதிப்பதாக சிறை நிர்வாகம் அறிவித்ததது. இதற்க்கு எதிர்ப்பு சவுக்கு சங்கர் சிறைச்சாலையிலேயே இன்று நான்காவது மூன்றாவது உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தால் நேற்று சவுக்குசங்கரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக, கைதிகள் உரிமைகள் மன்றத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான புகழேந்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். தொடர்ந்து சவுக்கு சங்கர் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி எழுத்துப்பூர்வமான கடித்தத்தை சங்கரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடலூர் சிறை நிர்வாகம், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளது. அதன் பேரில் சவுக்கு சங்கர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

savukku sangar protest end


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->