சவுக்கு சங்கரை கைது செய்ய வேண்டும் - முதல்வர், ஆளுநருக்கு சென்ற புகார்.!  - Seithipunal
Seithipunal


 ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், இழிவுபடுத்தியும் பதிவிட்ட சவுக்கு சங்கரை கைது செய்ய வேண்டும் என்று, தமிழக ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் மாநில தலைவர் நா.ஹரிஹரமுத்து ஐயர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் உள்ள இந்துக்களின் ஆன்மிக குருவான காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, சவுக்கு சங்கர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், இழிவுபடுத்தியும் பதிவிட்டுள்ளதை தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வன்மையாக கண்டிக்கிறது. இதை ஏற்க இயலாது.

எனவே, சவுக்கு சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று முதல்வரையும், ஆளுநரையும் கேட்டுக் கொள்கிறேன். 

வரும் காலங்களில் எவரும் இதுபோல தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தாதவாறு அரசாணை பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் நா.ஹரிஹரமுத்து ஐயர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

savukku sangar vs hariharamuthu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->