#PTRleaks || பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த ஆடியோவில் தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை கருப்பு பணம் சேர்த்துள்ளதாகவும், அதனை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அது ஜோடிக்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் திமுகவினர் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டனர் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமைலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அரசியல் காரணங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் கிரிமினல் சட்ட விதிகளின் கீழ் போதிய நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இருக்கும்போது நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமாக மாற்றக்கூடாது என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC dismissed case seeking CBI into PTR audio issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->