பொன்முடி வழக்கு || நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!!
SC praises Justice Anand Venkates in ponmudi case
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2002ஆம் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்க பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மீது நீண்ட வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்வதாக வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீடு செய்யாததை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குறிப்பு வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு இதுகுறித்து பதில் அளிக்குமாறு அமைச்சர் பொன்முடி, அவர்களுடைய மனைவி விசாலாட்சி மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்ததில் தலையிட முடியாது என தெரிவித்ததோடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டுகிறேன் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
English Summary
SC praises Justice Anand Venkates in ponmudi case