AravindKejriwal: முதல்வர் பதவி தப்புமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் தற்போது உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். 

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலுக்காக ஜாமினில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஆனால் அவர் முதலமைச்சராக முதல்வர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது. 

அரசின் செயல்பாடுகளில் தலையிட கடாத உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்குவது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து ரூ.50,000/- அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC to hear today plea to ArvindKejriwal form office of cm


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->