ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என சீமான் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து, கள்ளக்குறிச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் பேசியபோது;

கனடா நாடு ஜனவரி மாதத்தை தமிழர் கலாசாரம் மாதம் என்று அறிவிக்கின்றது. தமிழர்களுக்கான பண்டிகை நாளன்று தேர்வு வைத்தால் எங்களுக்கு தேசப்பற்று வருமா? தேசவெறுப்பு வருமா? புதியக் கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலப் பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் ஏற்கப்படாது என்று குறித்துள்ளார்.

புதியக் கல்விக் கொள்கை, ஒரே நாடு, ஒரே தேர்தல் இது எல்லாம் தேவையில்லாத திணிப்பு என்று கூறியுள்ளார்.

அத்துடன், உலகத்தில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தென் கொரியா. அங்கு எட்டு வயதில்தான் குழந்தைகள் 1ம் வகுப்பு சேர்க்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் தனக்கான உடையை அவனை உடுத்திக் கொள்ளும் வகையிலும், அவனது உணவை தானே எடுத்து உண்ணும் அளவிற்கு வளரும் வரை அவன் விருப்பப்படியே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறான். அங்கு எட்டு வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கும்போது, இங்கு அப்பொழுது பொது தேர்வு எழுத சொல்கிறார்கள் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நான் இருக்கும் வரை நிலத்தின் வளத்தை கெடுக்கும் எந்த திட்டமும் கொண்டு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்று சீமான் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman announces that we will definitely contest in the Erode by election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->