சீமான் நடித்து பாடிய திரைப்படத்துக்கு தமிழக அரசின் விருது! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து, பாடல் ஒன்றைப் பாடிய 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்திற்கும் விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த விருதுகள் இதுவரை உரியவர்களிடம் வழங்க வில்லை. 

இந்நிலையில், தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருகின்ற 14 ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், சிறந்த திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திற்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தின் முக்கிய கரு அண்ணன்-தம்பி பாசத்தையும், தாய்-தந்தையின் பாசத்தையும் எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர்கள் அண்ணன் தம்பிகளாக நடித்திருந்தனர். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்திருந்தார். மேலும், "பேசாமல் பேசாம.." என பாடல் ஒன்றையும் அவர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்கிய ராசு மதுரவன் கடந்த 2013ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார் என்பது வருந்தத்தக்க செய்தியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman mayandi kudumpathar movie tn govt award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->