பேனா சிலையை உடைத்தே தீருவேன்.. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளிப்பு..!! - Seithipunal
Seithipunal


அதிகார திமிரில் பேனா சிலையை வைத்தால், அதே அதிகாரத்தை கைப்பற்றி பேனா சிலையை உடைப்பேன்...!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேகனா நவநீதனை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பேனா சிலையை அமைத்தே தீருவோம் என திமுக கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் பேனா சிலையை உடைத்தே தீருவேன் என பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் "விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாக்க கிடங்கு அமைக்க முடியவில்லை.

விவசாயிகள் பயிரிட்ட நெட்களெல்லாம் நடுத்தெருவில் கொட்டப்பட்ட நிலையில் முளைத்து கிடைக்கின்றன. விவசாயிகள் விளைவித்த நிலை தெருவில் கொட்டியது போல டாஸ்மாக்கில் விற்கும் சரக்குகளை தெருவில் கொட்டி வைத்துள்ளார்களா..?

அதற்கென பிரத்தியேக சேமிப்பு கிடங்கை கட்டி அதில் சேமித்து வைத்துள்ளார்கள். நெல் மூட்டைகளை சேமிக்க குடோன் கட்ட காசு இல்லை ஆனால் சமாதி கட்டவும் பேனா சிலை வைக்கவும் காசு வருகிறதா..?

முரசொலி அறக்கட்டளையில் இருக்கும் பணத்தை எடுத்து பேனா சிலையை வையுங்கள். அப்பொழுதும் கூட கடலுக்குள் வைக்கக் கூடாது. உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரை உங்களுக்கு உதைக்குழி ஆகிவிட்டதா..? 

பேரறிஞர் அண்ணா இறந்த பிறகு கவலையிலும் கண்ணீரிலும் யாரும் கேள்வி கேட்காமல் இருந்து விட்டார்கள். இன்று அவ்வாறு இல்லை தமிழ் சமூக இளைஞர்கள் விழிப்புணர்வுடன் எழுந்து கொண்டிருக்கின்ற காலம் இது. இது தமிழ் தேசியப் பிள்ளைகளின் காலம். பிரபாகரன் பிள்ளைகளின் காலம்.

அதிகாரத் திமிரில் அத்துமீறி பேனா சிலை வைக்கப்பட்டால், அதே அதிகாரத்தை ஒரு நாள் கைப்பற்றி பேனா சிலையை உடைத்து நொறுக்குவோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை தூக்கியது போல இந்த பேனா சிலையையும் தூக்குவோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளிப்புடன் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman said again he will break Pen memorial statue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->