சீமானுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்.! மகிழ்ச்சியை தெரிவித்த சீமான்.! - Seithipunal
Seithipunal


நேற்று திருவொற்றியூரில் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளரை சந்தித்தார். அப்போது திடீரென சீமான் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சீமான் அழைத்து செல்லப்பட்டு, பின்னர் சிகிச்சைக்குப்பின் தான் நலமாக இருப்பதாக தகவல் தெரிவித்தார்.

வெயில் காரணமாக சீமானுக்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததாக அக்கட்சியின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில், "எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seeman say about cm stalin phone call april 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->