உதயநிதி அமைச்சர் ஆனால் தமிழ்நாடு அடுத்த சிங்கப்பூராக மாறிவிடும்! சின்னவரை கலாய்த்த சீமான்! - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த மணக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது சீமான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியிருந்ததாக அவர் மீது அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமான் முன் ஜாமீன் பெற்றுள்ளார். 

இந்த வழக்கு தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சீமான் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "மத்தியில் ஆளும் பாஜக அரசு நினைத்ததெல்லாம் தமிழகத்தில் செய்துவிடலாம் என நினைக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த தீவிரவாதிகளும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தான் இருக்கின்றனர்.

இவர்கள் எப்படி இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? தற்பொழுது தமிழக பாஜகவில் பெண் நிர்வாகிகளை இழிவுப்படுத்தி பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களின் பரவி வருகிறது. பெண்களை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது. ஆகையால் அண்ணாமலை இதை சரியான முறையில் கையாள வேண்டும். ஒருவேளை தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்தால் நாடே தலைகீழாக மாறிவிடும். தமிழ்நாட்டை சிங்கப்பூர் போல் மாற்றி விடுவார்" என பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு செஞ்சியில் நடைபெற்ற விழாவில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த சீமான். தற்போது உதயநிதி ஸ்டாலினை கிண்டல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman say udyanithi become minister TN will be the next Singapore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->