மாட்டிக்கிச்சு.! திமுகவுக்கு இந்த தேர்தலில் தகனம்.. அடித்து சொல்லும் செல்லூர் ராஜூ.!! - Seithipunal
Seithipunal


தமிழக தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கட்சி தீவு தொடர்பாக பெற்ற தகவலை சமூக வலைதளங்களில் பகிர அது குறித்து பிரதமர் மோடியும் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளிக்க பூதாகரமாக வெடித்தது இந்த கச்சத்தீவு விவகாரம். 

இப்ப நம்ம நரேந்திர மோடி கட்சி தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக செய்த துரோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியதால் காங்கிரஸும் திமுகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்த நிலையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "மாட்டிக்கிச்சு!! மாட்டிக்கிச்சு!! இந்த தேர்தலுடன் திமுக தகனம்!! என பிரபல நாளையத்தில் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக வெளியான செய்தியை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கச்சத்தீவு விவகாரம் தமிழக தேர்தல் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju Said DMK will beat in this election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->