இன்பநிதி வந்தாலும் தோளில் தூக்கிட்டு போவாங்க! அது கட்சியில்லை, கம்பெனி - வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு! - Seithipunal
Seithipunal


திமுக என்பது ஒரு கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, "உதயநிதி திமுகவில் திணிக்கப்பட்டவர். எதிர்க்கட்சியாக திமுக இருக்கும்போது, முக ஸ்டாலின், எனது குடும்பத்திலிருந்து யாரும், அதாவது என்னுடைய மகனோ, மருமகனோ அல்லது வேறு யாரோ திமுகவில் எந்த பதவிகளும் வர மாட்டார்கள் என்று தெரிவித்தார். 

நான் மட்டும்தான் அரசியலில் இருப்பேன் என்றும் உறுதிப்படுத்த தெரிவித்தார். ஆனால் இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு முதலில் இளைஞர் அணி பதவி வழங்கப்பட்டது. 

பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார், அதனை தொடர்ந்து அமைச்சர், இப்போது துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

ஜனநாயக இயக்கம் என்றால் அது அதிமுக மட்டும் தான். அதிமுகவில் மட்டும்தான் தொண்டர்களும் தலைவராகலாம். பொதுச் செயலாளராகலாம், முதலமைச்சராக கூட ஆகலாம். ஆனால் திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.

முதலில் கருணாநிதி, அவருக்கு பின் முக ஸ்டாலின், அவருக்கு பின் உதயநிதி. இவ்வளவு ஏன் திமுகவின் மூத்த தலைவராக உள்ள துறைமுருகன் இன்பநிதி வந்தாலும் கூட நாங்கள் தோளில் தூக்கிட்டு போவோம் என்று சொல்கிறார். திமுக ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு கம்பெனி, திமுக என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி" என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju Say About DMK MK Stalin Udhay Inbanithi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->