பாலியல் வன்கொடுமை! தி.மு.க வாய் திறக்காதது ஏன்? - டி.டி.வி தினகரன்! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில்  அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என டி.டி.வி தினகரன் கூறினார்.

நேற்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நடிகர் விஜயின் தவெக கட்சியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக கவர்னரின் பதவிக்காலம் முடிவடைந்தும் அது குறித்து இதுவரை தி.மு.க வாய் திறக்காதது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது மத்திய அரசுடன் தி.மு.க. இணக்கமாக இருப்பது அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளதான். அதற்காக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். மடியில் கனம் இருந்தால் பயம் இருக்கத்தான் செய்யும்.

நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடந்து வருகிறது. இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம்தான் முக்கிய காரணம். ஆனால் தி.மு.க அரசு தமிழகத்தில் போதை புழக்கத்தை கட்டுப்படுத்த  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் வருங்கால சன்னதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க அரசு தேர்தல் கால எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual assault Why DMK is not talking TTV Dhinakaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->