அவரை நம்பாதீங்க., காங்கிரசில் எந்த மாற்றமும் இல்லாமல் போய்டும் - அடித்து கூறிய சசி தரூர்!
shashi tharoor say about kharge
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள சசி தரூர், அவரின் நேரடி போட்டியாளரை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வருகின்ற 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19ஆம் தேதி (அடுத்த இரு தினங்களில்) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள மாநில காங்கிரஸ் எம்பி சசி தரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்போடு இரண்டு வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சந்தித்த சசி தரூர், "நாங்கள் (வேட்பாளர்கள்) இருவரும் எதிரிகள் இல்லை. நடக்கப் போவது போரும் அல்ல. நமது கட்சியின் எதிர்காலத்திற்கான தேர்தல்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் மூன்றாவது இடத்தில் மல்லிகார்ஜூன கார்கே இருக்கிறார். ஆனால் இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போன்றவர்கள் வெற்றி பெற்றால், எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் கொண்டுவர முடியாது.
காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே உள்ள அதே நடைமுறையே தொடர்ந்து நீடிக்கும். ஒரு நல்ல மாற்றம் வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும்" என்று சசி தரூர் பேசியுள்ளார்.
English Summary
shashi tharoor say about kharge