பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிரதமருக்கு சிவசேனா கடிதம்!
Shiv Sena Wrote a Letter to PM Modi
கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஜம்முவில் சிவ கோரி குகைக் கோவிலுக்கு சுற்றுலா சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜம்முவின் கத்வா மற்றும் தோடா ஆகிய இரு மாவட்டங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு CRPF வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக, தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணி, அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட நேர்ந்தால், இந்தியா பாகிஸ்தானுடனான அந்த போட்டியை விளையாடாமல் ரத்து செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சியின் சார்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கும், தேசிய விளையாட்டுத்துறை மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியோருக்கும் இந்த கடித நகலை இணைத்து அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
English Summary
Shiv Sena Wrote a Letter to PM Modi