ஞானவாபி மசூதிக்குள் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளக்கப்பட்டதா? மசூதி நிர்வாகிகள் மீது வழக்கு., போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஞானவாபி மசூதிக்குள் உள்ள சிவலிங்கம் உள்ளிட்ட இந்துமத அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக, ஹிந்துக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து மசூதி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற எந்த இந்து மதத்திற்கான சின்னங்கள் அடையாளங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து வாரணாசி நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற ஆய்வில் இந்து மத அடையாளங்கள், சிவலிங்கம் உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில், மசூதியில் உள்ள சிவலிங்கத்தை சேதப்படுத்தி இரண்டாக பிளக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் மசூதியில் உள்ள மற்ற இந்து அடையாளங்களையும் சேதப்படுத்தி, கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல் நிலையத்தில் இந்துக்கள் புகார் அளித்தனர்.

மேலும், இந்து அடையாளங்கள் மீது பெயின்ட் அடித்து மறைக்கும் பணிகள் நடப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மசூதி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shiva lingam inside the Gnanavapi Mosque Case against mosque administrators Police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->