இருவர் பலி | செந்தில் பாலாஜியும், ஸ்டாலின் குடும்பமும் தான் பொறுப்பு - ஷியாம் கிருஷ்ணசாமி!
Shyam krishnasamy Thanjai TASMAC Bar Death case
தஞ்சை மாவட்டம், கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்ததாகவும், பாரில் மது வாங்கி குடித்த விவேக் (36) மற்றும் குப்புசாமி என்ற முதியவர் உயிரிழந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் திமுகவினரால் ஆயிரக்கணக்கான பார்கள் மற்றும் ‘மனமகிழ் மன்றங்கள்’ மூலம் கள்ளச்சந்தையில் 24 மணிநேரமும் மது விற்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அனைத்திற்கும் செந்தில் பாலாஜி மற்றும் ஸ்டாலின் குடும்பமே பொறுப்பு.
‘மனமகிழ் மன்றங்கள்’ என்ற பெயரில் மது கூடங்களுக்கு இந்த ஆட்சியில் சுமார் 2000 உரிமங்கள் திமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற ₹50 லஞ்சம் பெறப்படுகின்றது.
இந்த மன்றங்களில் பெரும்பாலும் கள்ளச்சந்தை மதுவே விற்கப்படுகிறது. 365 நாட்கள், 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Shyam krishnasamy Thanjai TASMAC Bar Death case