500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக திமுக நாடகம்.. ஷியாம் கிருஷ்ணசாமி ட்விட்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று முதல் முதல்வரின் உத்தரவின்படி 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து, அவற்றை ஜூன் 22-ம் தேதி (இன்று) முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி குறைந்த வருவாய், குறைந்த இடைவெளி, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில், நீதிமன்ற உத்தரவு, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டது. இந்த கடைகள் அனைத்தும் ஜூன் 22-ம் தேதி (இன்று) முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது.

தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் புதிய தமிழகம் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "இரண்டாயிரம் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் 43,000 கோடியாக இருந்த மது விற்பனை லாபம் அடுத்த ஆண்டு 52,000 கோடியாக உயரும் என அறிவித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடுறிது திமுக!" என விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shyam Krishnasamy tweet DMK making drama 500 Tasmac shops closing


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->