கார்கேவுக்கு செக் வைத்த சித்து.. பற்றி எரியும் "இண்டியா கூட்டணி".. காங்கிரஸ் கட்சிக்குள் களேபரம்.!!
siddaramaia cheque to kharge india pm candidate rahul gandhi
ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இண்டியா கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துவரும் இந்த சூழலில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தனது பங்கிற்கு மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். கர்நாடகாவை ஆளும் சித்தராமையா தமையிலான காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை கூட்டணித் தலைவர்கள் பரிந்துரை செய்தனர்.
குறிப்பாக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை” என சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அதற்கு கார்கே, “தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்வு செய்யலாம்” என நிதிஷ்குமாரின் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா "இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியே. அவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வேண்டும். மீண்டும் தொடங்க உள்ள பாரத் பாத யாத்திரை மூலம் ராகுல் காந்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதியை உறுதி செய்வார்" பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு கார்கேவின் ஆதரவாளரான சுரேஷ் குமார் "கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் சித்தராமையாவுக்கு விருப்பம் இல்லை. சித்தராமையாவை முதல்வராக்க பாடுபட்ட கார்கேவுக்கு துரோகம் செய்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு கார்கேவை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் இதே சித்தராமையா தான்” என கடுமையாக சாடியுள்ளார். இந்த விவகாரம் இண்டியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது.
English Summary
siddaramaia cheque to kharge india pm candidate rahul gandhi