#BREAKING || கைது செய்யப்படுகிறான் நடிகன் சித்தார்த்.! அதிரடி நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசார்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து, தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில், "அராஜகவாதிகளின் சம்பந்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது" என்று தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

வீராங்கனை சாய்னா நேவால் பதிவை ரீடுவிட் செய்த நடிகன் சித்தார்த், ஆபாசமான வார்த்தையை குறிக்கும் விதமாகவும், இரட்டை அர்த்தத்தில் பொருள்படும்படி தேசிய வீராங்கனை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டு இருந்தான். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்த நிலையில், நடிகன் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, மகாராஷ்டிர மாநில டிஜிபி, மற்றும் சென்னை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. 

இதற்கிடையே, தான் செய்த செயல் அவன் தரப்பில் அது நியாயமது என்றும், அதை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்து இருந்தான் சித்தார்த்.

இந்நிலையில், நடிகன் சித்தார்த் மீது ஹைதராபாத் சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவன் மீது, section 67 of IT Act, Section 509 of IPC கீழ்., ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் விரைவில் அவனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுப்பது உறுதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டுக்கே பெருமை தேடி தரும் ஒரு தேசிய வீராங்கனையையே ஒருவன் இரட்டை அர்த்தத்தில், ஆபாசமாக அசிங்கப்படுத்தி பேசிவிட்டு தப்பித்து சென்றால், அது இந்த நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

விரைவில் அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதே பெண்ணியவாதிகளின் ஒரே கோரிக்கையாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddharth may be arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->