சூப்பர் பா!!!சிவசந்திரன்...கடின உழைப்பின் பலனை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...! - அண்ணாமலை
Sivachandran pleasure see hard work Annamalai
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் 'அண்ணாமலை' தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சிவச்சந்திரன் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Sivachandran pleasure see hard work Annamalai