வாக்குச்சாவடி அருகே ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்., அடித்து விரட்டிய போலீசார்.!  - Seithipunal
Seithipunal


வாக்குச்சாவடி அருகே திமுகவினருக்கும், அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, போலீசார் அவர்களை அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நகராட்சியின் 24 வது வார்டில், சாய் மந்திரி வித்யாலயா மழலையர் பள்ளியின் வாக்குச்சாவடியில் வாக்குபதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதற்கிடையே, திமுகவினர் வெளி நபர்களை கொண்டு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, அதிமுகவை சேர்ந்த நபர்கள் இரண்டு முறை தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனை மீறியும் திமுகவினர் வெளி நபர்களை அழைத்து வந்து பிரச்சாரம் மேற்கொண்டுதாக தெரிகிறது. இதனை அதிமுகவினர் தட்டிக் கேட்டுள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மேலும் வாக்குச்சாவடி பகுதியிலிருந்த சேர்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அங்கிருந்த காவலர்கள் தகராறில் ஈடுபட்ட திமுகவினரை அடித்து விரட்டினர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகங்கை டிஎஸ்பி, விரைவுப் படை போலீசார் தயிரில் ஈடுபட்டவர்களை அடித்து ஓடவிட்டனர்.

மேலும், இந்த தகராறு காரணமாக வாக்குச்சாவடி சிறிதுநேரம் பூட்டப்பட்டது. தற்போது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivagankai 24 election booth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->