#தமிழகம் || அரங்கேறிய கொடூர கொலை., அதிமுக-திமுக நிர்வாகிகள் கூட்டு சதி அம்பலம்.! கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


சிவகாசியில் நடைபெற்ற கொலை வழக்கில், அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவநீத கிருஷ்ணன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக கடந்த மார்ச் மாதம் அரவிந்தன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவகாசி ஒன்றியம், ஆணையூர் ஊராட்சி மன்றத் தலைவரும், அதிமுக நிர்வாகியுமான லட்சுமி நாராயணனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து, அதிமுக நிர்வாகி லட்சுமி நாராயணன், திமுக நிர்வாகி பிரவின், அந்தோணிராஜ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களை இரவோடு இரவாக விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். பழிக்குப் பழியாக நடந்த கொலை சம்பவத்தில் அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதால் சிவகாசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakasi murder case admk and dmk administrator arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->