தமிழ்நாட்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு!...காலரா மரணங்களை அதிமுக அரசு மறைத்து விட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
So far 11743 people have been infected with dengue in Tamil Nadu AIADMK government has hidden cholera deaths Minister M Subramanian
சென்னையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, அனைத்துதுறை அலுவலர்கள் எடுத்த முயற்சிகளின் காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 11,743 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நேற்று ஒரே நாளில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் டெங்கு பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் நடந்த காலரா மரணங்களை அதிமுக அரசு மறைத்ததாகவும், நோய் விவரங்களை எப்போதும் மறைக்கக்கூடாது; அப்போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் என்று கூறினார்.
English Summary
So far 11743 people have been infected with dengue in Tamil Nadu AIADMK government has hidden cholera deaths Minister M Subramanian