இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு.! உச்சநீதிமன்றம் சென்ற இஸ்லாமிய அமைப்பு.!
some islam committee complaint to supreme court
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு மனுதாக்கல் செய்துள்ளது.
ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா முகமது ஏ மதானி இந்த மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவரின் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சு மூலம், அரசியல் மற்றும் சமூக ரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தி, இஸ்லாமியர்களின் மதிப்பையும் மாண்பையும் குலைக்கும் விதத்தில் செயல்படுகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, பிரச்சாரம், வன்முறை அதிகரி்த்து உள்ளது.
அண்மையில் யாதி நரசிங்கானந்த் சரஸ்வதி என்பவர், இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராகப் பேசிய வன்மபப் பேச்சுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமியர்கள் மீது சாணியை அடிப்பது, மிரட்டல்கள் என ஏராளமான சம்பவங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகின்றது.
எனவே, உச்ச நீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
English Summary
some islam committee complaint to supreme court