திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர்!திமுகவின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது - உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பாடலை தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் பாடிய நிலையில், நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கி, மூன்றாவது வரியான தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரியை தவிர்த்து 4-வது வரியில் இருந்து பாடுவதை தொடர்ந்தனர்.

இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, நான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று நடத்தி வைக்கும் முதல் திருமணம் இது என்றும், திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை என்று கூறிய அவர், மணமக்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தால் அவர்களுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளதாக பேசிய அவர்,  தி.மு.க.வின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது என்றும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது என்று திட்ட வட்டமாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some people have set out to remove dravidianism dmk last donation cannot even be touched until there is a tamil udhayanidhi stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->