மக்கள் மனநிலை காங்கிரஸ்க்கு சாதகம் ! பாஜக மக்களிடம் படம் கற்கவில்லை! விளாசிய சோனியாகாந்தி! - Seithipunal
Seithipunal


மக்கள் மனநிலை காங்கிரசுக்கு சாதகமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி பேசியதாவது, பொதுமக்களின் மனநிலை கட்சிக்கு சாதகமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாம் மேற்கொண்டு பிரச்சாரம் காரணமாக மக்களுக்கு நம் மீது நம் கட்சியின் மீதும் நம்பிக்கை வந்துள்ளது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு  மத்திய பட்ஜெட்டில் முழுமையாக புறக்கணித்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய பட்ஜெட் பற்றி சாதகமாக பேசினாலும் ஏமாற்றம் பரவலாக உள்ளது.

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம்  மத்திய அரசுக்கு துளியும் இல்லை. மக்கள் தொகை ஜாதி வரியாக விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்வதை இது தடுக்க நினைக்கிறார்கள்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான அரசியல் வாக்குகள் குறைந்துள்ளன. இருந்தும் மக்களிடம் பாஜக எந்த பாடத்தையும் கற்கவில்லை. சமூகங்களை தொடர்ந்து பாஜக அரசு பிளவுபடுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi says people mood is in favor of Congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->