நாடாளுமன்ற தேர்தல் || தென் மாநிலத்தில் களமிறங்கும் சோனியா காந்தி.? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தெலுங்கானா காங்கிரசின் அரசியல் விவகார குழு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு பாராளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வரும் நிலையில் தென் மாநிலங்களில் சோனியா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு சோனியா காந்தி அறிவித்த முக்கிய வாக்குறுதிகள் தான் காரணம் எனவும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசாரம் கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றது எனவும் காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்த சோனியா காந்திக்கு தெலுங்கானா மக்கள் நன்றி தெரிவிக்கும்வகையில் வெற்றியை தருவார்கள் என தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சர் சபீர் அலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி அரசியல் ரீதியாக கடினமான காலத்தை எதிர்கொண்டபோது ஆந்திராவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi to contest parliamentary elections in telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->