எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் "இந்தியா"! சோனியா காந்தி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) என பெயர் வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கக் கூட்டணி (Indian National Democractic Inclusive Alliance) என்பதை சுருக்கி இந்தியா (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக இந்தியா என பெயர் சூட்டுவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SoniaGandhi announced opposition parties alliance name is India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->